சாமானியர்களின் சுமை இன்னும் அதிகரிக்கலாம்.. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஷாக்..!

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை அதிகரித்த நிலையில், வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தங்களது வருவாயினை அதிகரிக்கும் விதமாக கடன்களுக்கான வட்டி விகித்தத்தினை அதிகரித்து வருகின்றன.

எனினும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களை கவரவும் வட்டி விகிதத்தினை சற்று குறைவாக அதிகரித்துள்ளன.

அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ(SBI) தனது எம்சிஎல்ஆர் (MCLR) விகிதத்தினை அதிகரித்துள்ளது. இந்த விகிதம் எவ்வளவு அதிகரித்துள்ளது. வட்டி விகிதம் எவ்வளவு அதிகரிக்கலாம்,வாருங்கள் பார்க்கலாம்.

அடுத்தடுத்து பணிநீக்கம்.. அரண்டு போய் நிற்கும் ஊழியர்கள்..!

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

எம்சிஎல்ஆர் என்றால் என்ன?

எம்சிஎல்ஆர் விகிதம் என்பது Marginal Cost of Funds Based Lending Rates என்பார்கள். இது வங்கிகள் நுகர்வோர் கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உட்புற குறிப்பு விகிதமாகும். இந்த வட்டி அதிகரிப்பானது இதனுடன் இணைக்கப்பட்ட வீடு மற்றும் வாகனக் கடன்கள் போன்ற பல்வேறு கடன்களில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு அதிகரிப்பு?

எவ்வளவு அதிகரிப்பு?

எஸ்பிஐ வங்கியானது அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தினை 20 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த வட்டி அதிகரிப்பானது ஜூன் 15 முதல் அமலுக்கு வரவுள்ளது.

ரிசர்வ் வங்கியானது 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் அதிகரித்திருந்தாலும், எஸ்பிஐ வங்கி 20 அடிப்படை புள்ளிகள் மட்டும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல் அமல்
 

இன்று முதல் அமல்

ஜூன் 15 முதல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டியினை செலுத்த வேண்டிருயிருக்கும். இதுவரையில் 6.85% செலுத்தி வந்தவர்கள், இனி 7.05% செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த வட்டி அதிகரிப்பின் மத்தயில் ஓவர் நைட், ஒரு மாதம், 3 மாதம் உள்ளிட்ட காலங்களுக்கு வட்டி விகிதம் 7.05% ஆகும்.

எவ்வளவு வட்டி விகிதம்?

எவ்வளவு வட்டி விகிதம்?

இதே ஆறு மாத கால அவகாசத்திற்கு, 7.15%ல் இருந்து, 7.35% ஆக உயர்ந்துள்ளது. இதே 1 வருட காலத்திற்கு வட்டி விகிதம் 7.20%ல் இருந்து, 7.40% ஆக அதிகரித்துள்ளது.

இதே 2 வருட கால அவகாசத்திற்கு 7.40%ல் இருந்து, 7.60% ஆக அதிகரித்துள்ளது. இதே மூன்று வருட காலகட்டத்திற்கு 7.50%ல் இருந்து 7.70% ஆக அதிகரித்துள்ளது.

மற்ற வங்கிகளும் அதிகரிப்பு

மற்ற வங்கிகளும் அதிகரிப்பு

முன்னதாக ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் முன்னதாக கட்ன்களுக்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளன. ஆக இதனால் வீட்டுக் கடன், வாகன கடன், கல்விக் கடன் என் எம் சி எல் ஆர் விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன்களுக்கான மாத தவணை தொகை அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

SBI increased the MCLR ratio for loans by 20 basis points. EMI may increase

SBI raises MCLR by 20 basis points, This can increase the interest on the loan and increase the monthly installments.

Story first published: Wednesday, June 15, 2022, 12:04 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.