உங்கள் உங்கள் உள்ளூர் சந்தையில் டோஃபு எளிதில் கிடைக்கவில்லையா? இனி கவலை வேண்டாம். இந்த சூப்பர் சிம்பிள் ரெசிபி மூலம் உங்கள் சொந்த டோஃபுவை நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்.
இந்த சுவையான டோஃபுவை செய்ய, உங்களுக்கு 1 கப் கொண்டைக்கடலை மற்றும் 2 கப் தண்ணீர் தேவை. வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த டோஃபு புரதத்தால் நிறைந்துள்ளது, அதே நேரத்தில் பட்ஜெட்டுக்கு ஏற்றது.
இந்த கொண்டைக்கடலை டோஃபுவை 3-4 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் எளிதாக சேமிக்கலாம். நீங்கள் அடிக்கடி வீட்டில் ஸ்டிர்-ஃப்ரைஸ், சாலட்கள் செய்து, அவற்றில் சில புரோட்டீன் சேர்க்க வேண்டும் என்றால், இந்த ரெசிபி உங்களுக்கு ஏற்றது.
டோஃபு செய்வது எப்படி?
கொண்டைக்கடலையை 2-3 முறை சுத்தமான தண்ணீரில் கழுவவும். இப்போது கொண்டைக்கடலையை ஒரு வடிகட்டியில் போட்டு, ஓடும் நீரின் கீழ் மீண்டும் ஒருமுறை கழுவவும்.
அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை போட்டு, அதில் தண்ணீரைச் சேர்க்கவும். கொண்டைக்கடலை முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருப்பதை உறுதி செய்யவும். அவற்றை ஒரு இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள், அனைத்து தண்ணீரையும் வடிகட்டி, கொண்டைக்கடலையை மீண்டும் ஒரு முறை கழுவவும். ஊறவைத்த கொண்டைக்கடலையை ஒரு பிளெண்டரில் 2 கப் தண்ணீருடன் சேர்க்கவும்.
ஒரு மென்மையான பேஸ்ட் பதத்துக்கு வரும் வரை தொகுதிகளாக அரைக்கவும்.
முதலில் ½ கப் கொண்டைக்கடலை, 1 கப் தண்ணீர் சேர்த்து அரைத்து, பின்னர் மீதமுள்ளவற்றை 1 கப் தண்ணீரில் அரைக்கலாம்.
இப்போது பேஸ்டை, மஸ்லின் துணியில் சேர்த்து, அதை நன்கு பொதிந்து, அதன் சாற்றை கிண்ணத்தில் நன்கு பிழியவும்..
இப்போது இந்த சாற்றை ஒரு பாத்திரத்தில் ஊற்றி முழு தீயில் வைக்கவும். ஒரு கொதி வரும் வரை தொடர்ந்து கிளறவும். இப்போது மிதமான தீயில், கலவையை சுமார் 20-30 நிமிடங்கள் சமைக்கவும்.
கலவை கெட்டியாகத் தொடங்குவதை நீங்கள் கவனிப்பீர்கள். 20-30 நிமிடங்களுக்குப் பிறகு, கலவை போதுமான அளவு கெட்டியானதும், தீயை அணைக்கவும். இப்போது கலவையை சிறிது குளிர வைக்கவும்.
இந்தக் கலவையை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி தனியாக வைக்கவும். சிறிது நேரம் அப்படியே அப்படியே விட்டுவிடவும். டோஃபு முழுமையாக செட் ஆக 2 மணிநேரம் ஆகலாம்.
இப்போது கண்டெய்னரில் இருந்து எடுத்து உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தவும்.
இந்த கொண்டைக்கடலை டோஃபுவை ஸ்டிர்-ஃப்ரைஸ், சாலட் அல்லது உங்கள் விருப்பப்படி வேறு எந்த ரெசிபியிலும் பயன்படுத்தலாம். இந்த டோஃபு மிகவும் சுவையாக இருக்கும்.
இந்த ரெசிபியை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“