தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 20-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அதிமுகவில் தீராமல் தொடர்கிறதா இரட்டைத் தலைமை விவகாரம்… என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் பொதுக்குழுவில்? ‘ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
Raja Raja
என் ஓட்டு ஓ பி எஸ் சுக்கே… டெல்டா, மேற்கு, தெற்கு, மத்திய, வட மண்டலங்கள் என்று ஒட்டுமொத்த தமிழகம் ஏற்றுக்கொண்ட தலைவர்… எல்லா சமூக பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ளும் தலைவர் , உள்கட்சி ஜனநாயகம் காத்திடும் தலைவர். கூட்டணி கட்சிகள் புதிதாய் இணைந்திட வாய்ப்பளிக்கும் தலைவர்… ஹாட்ரிக் வெற்றி அடைந்திருக்கும் இவர் தலைமையில் இருந்திருந்தால்….. இவர் பேச்சை கேட்டிருந்தால்… கடைசி நேர குளறுபடிகளால் ஆட்சி மீது அதிருப்தியற்ற நிலையிலும் வெற்றி பெற்று தர முடியாதவர் கையில் மறுபடியும் கொடுத்திட அதிமுக ஒன்றும் பரிசோதனை எலி அல்ல.
Kulasai Baba Kulasaibaba
ஒற்றைத் தலைமை என்பது சரியான முடிவு தான் ஆனால் ஒற்றைத் தலைமை மட்டும் இப்போது அதிமுகவிற்க்கு போதாது நிர்வாக திறமையும் வேண்டும் அது OPS EPS இருவருக்கும் கிடையாது. யார் கட்சியினை ஆழ வேண்டும் என்ற போட்டியின் காரணமாகவே அதிமுக என்ற கட்சி அழிவின் விளிம்பில் நிற்கிறது.
மாணிக்கவாசகன் அம்பிகாபதி
அதிமுகவில் இனிமேல் ஒற்றைத் தலைமை என்பது ஒற்றைத் தலைவலியாகவே இருக்கும்….. பொறுப்பு இருவரில் ஒருவராக யாரிடம் சென்றாலும் மற்றவருக்குமுன் ஆதரவாளர்கள் கொதிப்படைவார்கள்…. கட்சி உடையும்… இன்னைக்கு வாயால சொல்லிட்டு இருக்கற பாரதீய ஜனதா நாளைக்கு நிஜமாவே எதிர்க்கட்சியாக இருக்கும்…. பிளவுபட்ட அதிமுக அவர்களின் தலைமையை ஏற்று அவர்கள் பகிர்ந்தளிக்கும் இடங்களில் நிற்க வேண்டியதுதான்…
Nellai D Muthuselvam
அகில இந்திய கட்சி தலைவர் பதவியை ஓபிஎஸ் இடம் வழங்கிவிட்டு. சட்டமன்ற கட்சி தலைவர் பதவி மற்றும் பொது செயலாளர் இபிஎஸ் வைத்து கொள்ள முடிவு எடுக்கப்படலாம். ஓபிஎஸ் தான் கட்சி தலைவராக இருக்க மிக சரியான நபர். தேசிய அரசியலுக்குள் நுழைய வேண்டும். இரட்டை பதவி தடைக்கு பிறகு தேசிய அரசியலில் அஇஅதிமுகவுக்கு மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது அதை ஓபிஎஸ் தான் நிரப்ப வேண்டும்.
BabuMohamed
என்ன..முடிவுஎடுக்க..போகிறார்கள்..இரண்டும்..முதலமைச்சர்..வேட்பாளர்கள்..பதவியைவிட.. இரண்டும்… பேருக்கும்.. மனமில்லை.. இரட்டை.. தலைமைதான்..தொடரும்…!
இன்றைக்கான லைக் டிஸ்லைக் கேள்வி, இன்று இரவு 7 மணிக்கு புதிய தலைமுறையின் சமூகவலைதள பக்கங்களில் வெளியாகும்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM