நமது உணவில் கீரை மற்றும் ஊட்டச்சத்து உள்ள பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் நாம் தினமும் வெண்டக்காய், அவரைக்காய், பீட்ரூட் என்று பலவகை பொரியல் செய்வோம். அல்லது கூட்டு வகைகளை செய்வோம். பருப்பு மற்றும் கீரை சேர்த்து கூட்டாக செய்வதையும் நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் பாசிப்பருப்பு- வெந்தயக் கீரை கூட்டு எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
பாசிப்பருப்பில் புரத சத்து, நார்சத்து, இருக்கிறது. வெந்தயக்கீரையில் பொட்டாஷியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி6 இருக்கிறது. இதனால் இந்த கூட்டு வகை இதய கோளாறு, நீரிவிழிவு நோய் ஆகியவற்றை ஏற்படமால் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
2 கப் வெந்தயக் கீரை
அதில் பாதி பாசிப்பருப்பு
2 வெட்டிய பெரிய வெங்காயம்
½ ஸ்பூன் சீரகம்
2-3 பச்சை மிளகாய், நன்கு வெட்டியது
3-4 பூண்டு பற்கள் நன்கு வெட்டியது
½ ஸ்பூன் மஞ்சள் பொடி
தேவைக்கேற்ப எண்ணெய்
தேவைக்கேற்ப உப்பு
செய்முறை
பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊரவைக்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுக்கவும் அதில் சிறிது நீர்,ஊரவைத்த பாசிப்பருப்பு போட்டு மூடிவைக்கவும். 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் இதை சமைக்க வேண்டும்
வேறொரு பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் எண்ணெய்யை விட்டு, சீரகத்தை சேர்க்கவும். வெட்டிய வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்துகொள்ளவும். தற்போது நன்கு கிளரவும். சிறிது நேரம் கழித்து வெந்தயக் கீரை, உப்பு, மஞ்சள் பொடியை சேர்த்துகொள்ளவும். 2 முதல் 3 நிமிடங்கள் வரை சமைக்கவும் அப்போது கீரை மிரதுவாகும். தற்போது பாசிப்பருப்பை சேர்க்கவும். இதைத்தொடர்ந்து சிறிது நேரம் வரை சமைக்கவும். தற்போது பாசிப்பருப்பு – வெந்தயக் கீரை கூட்டு ரெடி.
இதில் 102 கலோரிகள் மட்டுமே இருக்கிறது. 15கிராம் கார்போஹைட்ரேட், 4.2 கிராம் நார்சத்து, 5.6 கிராம் புரதசத்து இருக்கிறது.