அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சர்வதேச போட்டியில் இலங்கை வீரர் துனித் வெல்லலேஜ் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது.
எனினும், தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய இலங்கை அணியின் இளம் வீரர் துனித் வெல்லலேஜ், தனது முதல் விக்கெட்டாக ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக்க செய்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், ஸ்மித் 3வது இடத்தில் உள்ளார். இலங்கை நிர்ணயித்த 301 ஓட்டங்கள் இலக்கை நோக்கி அவுஸ்திரேலிய அணி விளையாடியது.
அப்போது நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ஸ்மித், 53 ஓட்டங்களில் இருந்தபோது துனித் பந்துவீச்சில் போல்டனார்.
Dunith Wellalage’s 2 wickets on debut 🔥
How impressive was Dunith during his international debut?
Full match highlights – https://t.co/ss4rCa8R4B#SLvAUS #CheerForLions pic.twitter.com/n504BEWSu6
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 15, 2022
இது அவரது முதல் சர்வதேச விக்கெட்டாக அமைந்தது. அதன் பின்னர் ஆஸ்டான் அகரை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார்.
மொத்தம் 7 ஓவர்களை வீசிய துனித் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டி அவருக்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளதால் , எதிர் வரும் போட்டிகளில் அவர் அணியில் தொடருவார் என்றும், சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக உருவெடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Photo Credit: Twitter(@OfficialSLC)