Google Maps Toll Charges: கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப்ஸ் தளத்தை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. தற்போது சுங்கக் கட்டணங்களை பயணத்தின் போது அறிந்து கொள்ள புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது கூகுள் தரப்பில் இருந்து இந்த அப்டேட் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் பயணிக்க தீர்மானிக்கு இடத்திற்கு செல்லும் முன், வழியில் இருக்கும் சுங்கச்சாவடிகள் எத்தனை, எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
கூகுள் மேப்ஸில் சுங்கக்கட்டணம்
இந்த அம்சம் குறித்த தகவலை நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் வெளியிட்டது. தற்போது இது பயனர்களுக்கு கிடைக்கத் தொடங்கியுள்ளது. சுங்கக் கட்டண தகவல்கள் அனைத்து, சுங்கச்சாவடியில் இயக்குநகரத்தில் இருந்து பெறப்படுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
WhatsApp Data Transfer: ஐபோன், ஆண்ட்ராய்டு இடையே பிணைப்பை ஏற்படுத்திய வாட்ஸ்அப்!
மேலும், சுங்கச்சாவடிகளை தவிர்த்து, சுங்கக்கட்டணம் இல்லாத சாலைகளையும் கூகுள் மேப்ஸ் பயனர்களுக்குப் பரிந்துரைக்கிறது. முன்னதாகவும், இதே அம்சம் கூகுள் மேப்ஸ் தளத்தில் இருந்ததே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், இது முற்றிலும் மாறுபட்டது. முன்பு உங்களுக்கு சுங்கச்சாவடிகள் இருப்பதற்கான அறிகுறிகள் தான் காட்டப்படும். ஆனால், புதிய அப்டேட் மூலம் சுங்கக்கட்டணம் எவ்வளவு வசூலிக்கப்படுகிறது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
Google Maps: சுவாசிக்கும் காற்றின் தரத்தை அறிய கூகுள் மேப்ஸ்!
கூகுள் அறிக்கையின்படி, இந்த அம்சத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள சுமார் 2000 சுங்கச்சாவடிகள் இணைக்கப்பட்டுள்ளது.
Xiaomi: சியோமி போன்களின் பேட்டரியை வெறும் ரூ.499க்கு மாற்றலாம்!
ஆப்பிள் iOS, கூகுள் ஆண்ட்ராய்டு ஆகிய இரு வேறு இயங்குதள பயன்பாடுகளிலும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் பல நாடுகளின் ஆதரவை சேர்க்க கூகுள் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் கூகுள்
கூகுள் தனது தளங்களில் பல மேம்படுத்தல்களை செய்து வருகிறது. வெளிவர தயாராக இருக்கும் ஆண்ட்ராய்டு 13 பதிப்பில் இந்த அனைத்து அம்சங்களும் பயனர்களுக்காக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Android 13: ஆண்ட்ராய்டு 13இல் கிடைக்கும் 10 முக்கிய அம்சங்கள்!
மிக முக்கியமாக Android 13 செட்டிங்ஸ் உதவியுடன், ஒவ்வொரு ஆப்ஸுக்கும் வெவ்வேறு மொழி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க முடியும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
நீங்கள் பன்மொழி பேசுபவராக இருந்தால், சூழ்நிலையைப் பொறுத்து வெவ்வேறு மொழிகளை தேர்வு செய்யலாம். ஏனென்றால், ஒவ்வொரு செயலிக்குமான மொழி தேர்வு மாறுபடலாம்.
கூகுள் மேப்ஸ் தளம் அல்லது செயலி உங்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பதை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடுங்கள்.