கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது என்று, தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த அவரின் அந்த மனுவில், “சிவகங்கை, சிங்கம்புணரி அருகே உள்ள சண்டி வீரன் கோவில் திருவிழாவில், சாதி அடிப்படையில் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. கோவிலில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்க கூடாது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ‘கோவில்களில் முதல் மரியாதை என்பது கடவுளுக்கு மட்டுமே, மனிதனுக்கு அல்ல’ என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு அண்மைய செய்தி, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்றும், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியும் செய்வதில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், வட பெருமாக்கம் பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்திற்கு மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதில்,
அரசு அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்க, அரசு அதிகாரிகள் எதற்காக ஊதியம் பெறுகின்றனர் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த பணியையும் செய்வதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
அதிகாரிகள் முறையாக பணியாற்றுவதற்கு அரசுதான் காரணம் எனவும் நீதிபதிகள் காட்டமான விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.