காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நுழைந்த காவல்துறை… தொண்டர்களை தாக்கியதால் பரபரப்பு

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் தொடர்ந்து மூன்றாவது நாளாக அமலாக்க இயக்குனரகம் முன்பு ஆஜரான நிலையில், டெல்லி போலீஸார் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அலுவலக நிர்வாகிககள் மற்றும் தொண்டர்களை தாக்கியதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் காங்கிஸ் தலைமை அலுவலகத்திற்குள் நுழையும் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்ள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள காவல்துறையினர் தள்ளிவிட்டு செல்வும் காட்சிள் பதிவாகியுள்ளது.

இந்த பதிவில்,  “ஓ சர்வாதிகாரி. நீங்கள் சொத்துக்களை சேதப்படுத்த வேண்டும் என்றால், ஜனநாயகத்தின் நாற்காலியில் இருந்து இறங்கி மக்கள் மன் நில்லுங்கள். உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யமான காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை உங்கள் காவல்துறை குண்டர்களை வைத்து கலங்கப்படுத்திவிட்டீர்கள்.  உங்கள் ஆணவத்தை அழித்து ஈகோவை உடைப்போம் என்று பதிவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஜனநாயகத்தை பாஜக கொன்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் கதவுகளை அவர்கள் உடைத்தபோது, ​​அவர்கள் நம் முன்னோர்கள் போராடி தங்கள் உயிரைக் கொடுத்து பாதுகாத்த ஜனநாயகத்தை மிதித்துவிட்டார்கள் என்று தனது ட்விட்ர் பதிவில் கூறியுள்ளார்.

இதனிடையே, காங்கிரஸ்  தலைமை அலுவலகத்தின் நுழைந்த காவல்துறை அதிகாரிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தினார். இது தொடர்பாக “இன்று அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவார்கள். நாளை காங்கிரஸ் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ராஜ்பவன்களையும் முற்றுமையிடும். நாளை மறுநாள் அனைத்து மாவட்ட அளவிலும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நலையில், காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் இன்று (ஜூன் 15) மாபெரும் போராட்டங்களை நடத்தினர். அப்போது பேசிய காங்கிரஸ் எம்பியும் அக்கட்சியின் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி “நாங்கள் தீவிரவாதிகளா? எங்களைப் பார்த்து ஏன் பயப்படுகிறீர்கள்? காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக ஏன் காவல்துறையைப் பயன்படுத்துகிறார்கள், ”என்று கேள்வி எழுப்பியுள்ளார்..

இந்த போராட்டம் தொடர்பாக இதுவரை 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் இன்று கூடுவதற்கு எந்த அனுமதியும் எடுக்கவில்லை. அதேபோல் எந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அவர்களின் அலுவலகப் பணியாளர்களுக்குத் தெரியும்”.

இந்த கூட்டத்தை கூட்டுவதற்கு அனுமதி இல்லை என்று கட்சியினருக்குத் தெரிவித்த போதிலும், ஒரு சில தலைவர்கள் முன்னால் சென்று எதிர்ப்பு தெரிவித்தனர், சில தொழிலாளர்கள் இன்றும் எங்களின் கட்டளைக்கு உடன்படாததால், நாங்கள் அவர்களை தடுத்து நிறுத்தினோம். 2.5 நாட்களில், சுமார் 800 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், என்று சிறப்பு சிபி (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர் ஹூடா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.