அமெரிக்காவில் பருத்தி விளைச்சல் பாதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சானிட்டரி நாப்கின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கடைகளில் உள்ள அடுக்குகளில் சானிட்டரி நாப்கின்கள் இல்லாதது குறித்து எவரும் பேசவில்லை என டைம் இதழில் வந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது.
இதையடுத்து அமெரிக்காவில் நாப்கின் தட்டுப்பாடு பேசுபொருளாகியுள்ளது. போருக்குப் பின் ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து உரம் வழங்கல் தடைபட்டுள்ளதால் நாப்கின் தயாரிப்புக்கு மூலப்பொருளான பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கொரோனா சூழலில் தொழிலாளர் பற்றாக்குறையாலும் நாப்கின் உற்பத்தி குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஓராண்டுக்கு முன் இருந்ததைவிடப் பத்து விழுக்காடு விலை உயர்ந்துள்ள நிலையில், பற்றாக்குறையைக் காரணங் காட்டி விலை ஏற்றப்படவில்லை என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.