Moto G82 5G Sale: சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோரோலா ஜி82 5ஜி ஸ்மார்ட்போன் பல அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் pOLED டிஸ்ப்ளே, OIS கேமரா, ஸ்னாப்டிராகன் 5ஜி புராசஸர் போன்ற லேட்டஸ்ட் அம்சங்கள் உள்ளன. தற்போது விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த 5ஜி போன், பல தரப்பட்ட முன்னணி பிராண்ட் ஸ்மார்ட்போன்களுக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5G: 4ஜியை விட 10 மடங்கு வேகமாம்! 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!
மோட்டோரோலா ஜி82 5ஜி போன் விலை (Motorola G52 5G Price)
வைட் லில்லி, Meterorite கிரே ஆகிய இரு நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு ரேம் வேரியண்டுகள் வருகிறது. 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மெமரி வேரியண்ட் விலை ரூ.21,499 எனவும், 8ஜிபி+128ஜிபி வேரியண்ட் விலை ரூ.22,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாம் கணித்திருந்த அதே விலையில் போன் வெளியான ஸ்மார்ட்போனை வாங்கும் எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.1,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
முறையே பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு 5% விழுக்காடு நேரடி கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகிறது.
மோட்டோரோலா ஜி82 5ஜி அம்சங்கள் (Motorola G52 5G Specifications)
மோட்டோ ஜி82 5ஜி போனில் முழு எச்டி+ 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பிக்சல் ரெசலியூஷன் 2460×1080 ஆக இருக்கிறது.
இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி (Qualcomm Snapdragon 695 5G) சிப்செட் நிறுவப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் ஒரே நேரத்தில் பல பணிகளை நம்மால் மேற்கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் கொண்டு இந்த போன் இயக்கப்படுகிறது. விளம்பரங்கள் இல்லாத போனாக மோட்டோ ஸ்மார்ட்போன்கள் வலம்வருவது கூடுதல் பலம் என்றே சொல்லலாம்.
Google Maps: கூகுள் மேப்ஸ் அப்டேட்… விரல் நுனியில் சுங்கக்கட்டணம் !
மோட்டோரோலா ஜி82 5ஜி கேமரா (Motorola G52 5G Camera)
பின்பக்கத்தில் மூன்று கேமராக்கள் கொண்ட அமைப்புள்ளது. இதில் OIS உடன் வரும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் + டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் ஆகியன இருக்கும்.
செல்ஃபிக்களுக்காக 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதன் சேமிப்பு திறனை மேம்படுத்த 1TB ஆதரவுடன் வரும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
Nothing Phone 1: நம்ம தமிழ்நாட்டில் தயாராகும் நத்திங் போன் 1 ஸ்மார்ட்போன்!
மோட்டோரோலா ஜி82 5ஜி பேட்டரி (Motorola G52 5G Battery)
இந்த ஸ்மார்ட்போனுக்கு ஒரு முறை இயங்குதள அப்டேட் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட்ஸும் கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
இந்த போனில் 5,000mAh திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. டால்பி அப்மாஸ் தரத்திலான ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார், ப்ளூடூத் 5.1 போன்ற இணைப்பு ஆதரவுடன் இது சூப்பர் ஸ்டாராக வலம்வருகிறது.