புதுடில்லி: ”விண்வெளி சொத்துக்கள் எதிர்கால போர்களின் போது வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்,” என, நம் விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி தெரிவித்தார்.
டில்லியில் நேற்று நடந்த, ‘ஜியோ இன்டலிஜென்ஸ் 2022’ நிகழ்ச்சியில் நம் விமானப்படை தளபதி விவேக் ராம் சவுத்ரி பேசியதாவது: பாரம்பரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நீண்ட சேவை மற்றும் பரந்த பயன்பாடு காரணமாக அவற்றின் மதிப்பை நிரூபித்திருந்தாலும், குறைந்த மற்றும் நடுத்தர சுற்றுப்பாதையில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களும், அதற்கென குறிப்பிட்ட திறன்களை கொண்டுள்ளன.
இந்த பிரிவில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் போட்டிபோட்டு நுழைகின்றன.எதிர்கால போர்களில், விமானப்படையின் ஆற்றலை போலவே, வின்வெளித்துறையும் முக்கியப் பங்காற்றும் நிலை உருவாகும். அப்போது, முப்படைகளிலும் விண்வெளி துறையின் பங்கு அதிகரிக்கும். விண்வெளியில் உள்ள செயற்கைகோள்கள் உள்ளிட்ட சொத்துக்கள், எதிர்கால போர்களின் போது எதிரிகளின் இலக்காக கூடும். எனவே, அது போரின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement