டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை களமிறக்க மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை நிறுத்த முடிவு செய்தோம்; ஆனால் அவர் மறுத்துவிட்டார். காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் விவாதித்தோம் என கூறினார்.