வீரர்கள் மற்றும் ஆயுத பர்ராகுறையால், பழைய டாங்கிகள் மற்றும் வீரர்களை ரஷ்யா தேடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா, உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 100 நாட்களில் தனது இராணுவத் திறனை ஏராளமாகப் பயன்படுத்தியதால், இப்போது உக்ரைனின் கிழக்கில் உள்ள பழைய டாங்கிகள் உட்பட இராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்களைக் கண்டறிய நாடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ரஷ்ய படை ஈடுபட்டு வருகிறது என்று கள நிலவரத்தை அறிந்த மூத்த ஐரோப்பிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ரஷ்யா ஒரு பெரிய குழுவை மீட்டுருவாக்க சில மாதங்கள் தேவைப்படலாம், என்றும் அதனால் தாக்குதல்கல் மெதுவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்யா ஒரு வெகுஜன அணிதிரட்டலை அறிவிக்க நிர்பந்திக்கப்படலாம், மேலும் சண்டையைத் தொடர வீரர்களை அழைத்தாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
ரஷ்யாவின் தாக்குதலால் ஒரு நாளைக்கு 100 அல்லது அதற்கு மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் கொல்லப்படுகின்றனர்.
போரின் ஆரம்பத்தில் தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய நகரங்களை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ரஷ்யா டான்பாஸ் பகுதியை மையப்படுத்தி முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
ஆனால், ரஷ்யாவின் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.
ரஷ்யாவில் ஆட்கள் மற்றும் பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படும் நிலையில், சில ஐரோப்பிய அதிகாரிகள் ஒருவிதமான போர்நிறுத்தத்தை நாடுவதற்கு சில மாதங்கள் ஆகலாம் என்று கூறுகின்றனர்.
ரஷ்யா இதுவரை அடைந்த வெற்றிகளை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என கூறினர்.
இந்த மோதல் இப்போது ஒரு போராக மாறியிருப்பதாகத் தோன்றினாலும், இந்த முட்டுக்கட்டை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்பில்லை என்றும், நெருக்கடி நிலை இன்னும் சில மாதங்கள் இருக்கும் என்றும் ஒரு மூத்த கிழக்கு ஐரோப்பிய அதிகாரி எச்சரித்தா
ர். அதேசமயம், ரஷ்யா கடந்த காலத்தில் மெதுவாக காணப்பட்டாலும், பின்னர் அதன் முன்னேற்றங்களை மீட்டெடுத்துள்ளது என்பதையும் நினைவில்கொள்ளவேண்டி உள்ளது.