படம் பார்த்து கதை சொல்லுங்கள் என்று படித்திருப்போம், ஆனால், இந்த படத்தைப் பாருங்கள், முதலில் என்ன பார்த்தீங்கணு சொல்லுங்க, பிறகு இந்த படம் உங்கள் கதையை சொல்லும். என்ன நம்ப முடியவில்லையா?
அனைவரும் கிளி ஜோசியம் பற்றி தெரிந்திருக்கும். கூண்டுக்குள் இருக்கும் கிளி வெளியே வந்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீட்டுக் கட்டுகளில் ஒன்றை எடுத்து கொடுத்துவிட்டு மீண்டும் கூண்டுக்குள் சென்று அடைந்துகொள்ளும். சீட்டில் உள்ள படத்தை வைத்து கிளி ஜோசியக்காரர் நமக்கு ஜோசியம் சொல்வார்.
இணையமும் சமூக ஊடகங்களும் கோலோச்சும் இந்த காலத்தில், கிளி ஜோசியத்தின் இடத்தை ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எடுத்துக்கொண்டுள்ளன.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், ஒருவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதால் பலரும் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், ஒரு மண்டை ஓடு டிஜிட்டல் ஓவியம். இதில் உங்களுக்கு முதல் பார்வையில் என்ன தெரிகிறது என்று கூறினால், அது உங்கள் ஆளுமையையும் குண நலனையும் கூறுகிறது.
பிரைட் சைட் யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள இந்த மண்டை ஓடு ஆப்டிகல் இல்யூஷன் படம், முதலில் பார்ப்பதற்கு ஒரு மண்டை ஓடு போல தெரியும். ஆனால், உற்று கவனித்தால், மண்டை ஓடு படத்திற்குள் வேறு சில உருவங்களும் தெரியும்.
ஜன்னலுக்கு வெளியே பார்க்கும் பெண்
இந்த மண்டை ஓடு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் ஒரு பெண் ஜன்னலுக்கு வெளியே பார்ப்பதைக் முதலில் பார்த்திருந்தால், நீங்கள் ஆபத்துக்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பீர்கள் என்பதைக் குறிக்கிறது. மேலும் சில சமயங்களில் உங்களை அறியாமலேயே உங்கள் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்று விளக்குகிறது. நீங்கள் மிகவும் தன்னிச்சையாகவும் சற்று அப்பாவியாகவும் இருக்கிறீர்கள். விரும்பத்தகாத விளைவுகளுக்கு நீங்கள் தயாராக இல்லை.
மண்டை ஓடு
பிரைட் சைட் யூடியூப் சேனலில் உள்ள வீடியோவின்படி, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் மண்டை ஓட்டை பார்த்தால், நீங்கள் ஒரு இலட்சியவாதி என்பதைவிட யதார்த்தவாதி என்பதை இது குறிக்கிறது.
உங்களை நன்கு அறியாத நபர்களிடம் நீங்கள் சற்று குறைவானவராக தோன்றலாம். எல்லா நல்ல விஷயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பண்டைய கிரேக்கத்திற்கு முன்னதாகவே இருந்தது என்று நம்பப்படுகிறது. கிரேக்கர்கள் தங்கள் கட்டிடக்கலை மற்றும் கலையில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தை பயன்படுத்தினர். மேலும், ஆரம்பகாலத்தில் கிரேக்க கூரைகளில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் காணப்பட்டன. அதனால், ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்றும் புது விஷயம் அல்ல.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”