வயர்லெஸ் சார்ஜிங் வசதியா.. இது ரொம்ப நல்லா இருக்கே.. ஸ்மார்ட்போனில் புதிய அத்தியாயமா?

ஜூலை மாத தொடக்கத்தில் நத்திங் போன் (1) சந்தையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வித்தியாசமான பெயரை கொண்ட இந்த நத்திங் போன், தமிழகத்தில் தனது உற்பத்தியினை தொடங்கவுள்ளது தான் ஹைலைட்டே.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்த நத்திங் போன் நிறுவனம், தொழில் நுட்ப சாதனங்களை உற்பத்தி செய்து வரும் ஒரு நிறுவனமாகும். இது சில மாதங்களுக்கு முன்பே நத்திங் போன் குறித்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது.

டெபிட், கிரெடிட் பயன்படுத்துபவரா நீங்க.. ஜூலை 1 முதல் வரவிருக்கும் மாற்றத்தை தெரிந்து கொள்ளுங்க!

வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

சந்தைக்கு வரும் முன்பே இந்த போன் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். ஒன்பிளஸ்-ன் இணை நிறுவனரான கார்ல் பெய் தலைமையிலான இந்த போன், வயர்லெஸ் சார்ஜிங் வசதியினை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. இது பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

இந்த நத்திங் போன் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான நத்திங் ஓஎஸ் மூலம் இயங்கும் என கூறப்படுகிறது. அதே போன்று இது குவால்காமின் ஸ்னாப்டிராகன் SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இது 1,080×2,400 பிக்சல்கள் அம்சத்துடன், 6.55-இன்ச் OLED டிஸ்ப்ளே வசதியுடன் வரலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதன், டிஸ்ப்ளே பேனலில் தட்டையான விளிம்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உற்பத்தி
 

சென்னையில் உற்பத்தி

ஆக இப்படி சந்தைக்கு வரும் முன்பே ஸ்மார்ட்போன் பிரியர்களை எதிர்பார்க்க வைத்துள்ள இந்த போனில் குறித்த, முக்கிய அப்டேட்களுக்காக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டுள்ளனர் எனலாம்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவெனில் இந்த நத்திங் போன், தமிழகத்தில் தயாரிக்கப்படவுள்ளது. இதனை நத்திங் நிறுவனத்தின் இந்திய துணைத் தலைவர் மனு சர்மா உறுதி செய்துள்ளார். இது சென்னையில் எங்கு தயாரிக்கப்படும் என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

 சென்னையில் எங்கு?

சென்னையில் எங்கு?

எனினும் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் மற்றும் பெகட்ரான் மொபைல் ஆலைகளில் தயாரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 12-ம் தேதி அன்று இரவு 8.30 மணி அளவில் இந்த போன் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டீசரை பிளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பயன் என்ன?

பயன் என்ன?

மொத்தத்தில் சென்னையில் இதன் உற்பத்தி தொடங்கப்படலாம் என்பதால் இதனால், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இது தமிழகத்தின் ஜிடிபி வளர்ச்சிக்கும் உறுதுணை புரியலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Nothing phone (1) to start production in Tamil Nadu

Nothing Phone (1) will soon start production in Tamil Nadu

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.