லண்டன் இரயில் நிலையத்தில் பத்து வயது சிறுமியிடம் தவறான நடந்து கொண்ட நபர் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
விக்டோரியா ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.
அன்றைய தினம் மதியம் 2.50 மணியளவில் 10 வயது சிறுமியை அணுகிய நபர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.
இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சிசிடிவியில் பதிவான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
British Transport Police
சம்பவம் நடந்ததிலிருந்து அதிகாரிகள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், மேலும் படங்களில் உள்ள நபர் தங்கள் விசாரணைக்கு உதவ முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
டிடெக்டிவ் கான்ஸ்டபிள் டோனி கிட்டின்ஸ் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மிக இளம் வயதினர் ஆவார், இதில் தொடர்புடைய நபரை கண்டறிந்து விசாரணைக்காக காவலில் வைக்க நாங்கள் அயராது உழைத்து வருகிறோம்.
சிசிடிவி படங்களில் உள்ள நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை கோருகிறேன்.
இது எங்கள் விசாரணைக்கு உதவும் என கூறியுள்ளார்.
British Transport Police