கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த – பரபரப்பாகும் தென்னிலங்கை


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கினால் மாத்திரமே 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த முன்வைத்துள்ள நிபந்தனை

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த - பரபரப்பாகும் தென்னிலங்கை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்காத வரையில் 21ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கும் வரையில் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டாளர்களுக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

21ஆவது திருத்தத்தில் பயனில்லை

கோட்டாபயவுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த - பரபரப்பாகும் தென்னிலங்கை

இன்று நாட்டின் அடிப்படைத் தேவை 21ஆவது திருத்தம் அல்ல, மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வேயாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களுக்காக உழைக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் கிடைத்து அது வலுவடையும் என்றால் அதற்கு ஆதரவு வழங்குவதே தங்கள் கட்சியின் நோக்கம் எனவும், அவ்வாறு இன்றி வெற்று அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்கினால் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது என அவர் சுட்டிக்காடியுள்ளார்.

நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை ஜனாதிபதியிடம் இருந்து அகற்றி பிரதமருக்கு அந்த பதவி வழங்கப்படும் என்றால் அதற்கு ஒரு போகும் இணக்கம் வெளியிட முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு அதிகாரம் வழங்க முடியாது

இல்லாத பிரதமருக்கு பிரதமரின் அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் அதற்கு தாம் உடன்படப்போவதில்லை என தெரிவித்த மகிந்த ராஜபக்ஷ, அது ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

இது ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்கும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.