கணவனை கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு திருமணமாகி புகழரசி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை சக்திவேல் திடீரென இறந்து விட்டதாக அவரது மனைவி உறவினர்களுக்கு தெரிவித்தார். சக்திவேலின் மூத்தசகோதரர் அவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் புகார் தெரிவித்தார்.
அவரின் புகாரை அடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் அவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.முதற்கட்ட விசாரணையில் சக்திவேலின் மனைவி புகழரசிக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்த முத்துக்குமார் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக தெரியவந்தது.
இதனை அடுத்து, சக்திவேலின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் உள்ளன. முத்துகுமாருக்கும் அவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அவர்களுக்கு தடையாக இருந்ததால் கொலை செய்யமுடிவு செய்தனர். அதன்படி, சக்திவேலுக்கு தண்ணீரில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து புகழரசி அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.
அதன் பின், விஷம் கலந்த பாலை கொடுத்துள்ளார். ஒரு வேளை உயிர்பிழைத்தால் என்ன செய்வது என பயந்து போன அவர் மயக்கநிலையிலேயே அவருக்கு விஷம் கலந்த சாப்பாட்டை கொடுத்துள்ளார். இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து, புகழரசியையும் முத்துகுமாரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றனர்.