திருவள்ளூர் அருகே, பப்ஜி விளையாட்டின் போது நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நண்பனை கத்தியால் குத்திய சக நண்பன் உட்பட 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கூடப்பாக்கத்தைச் சேர்ந்த நண்பர்களான சசிகுமார் மற்றும் அஜித்குமார் ஆகியோர் வீட்டின் அருகில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறு கோஷ்டி மோதலாக மாறியது.
காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இது தொடர்பாக சசிக்குமாரின் உறவினர் விஜயகுமார், அஜித்குமாரின் சகோதரர்கள் செல்வம், சாமுவேல், அபிலேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.