அதானி Vs அம்பானி.. மாறிப்போகும் கணிப்புகள்.. நம்பர் 1 யாருக்கு?

சமீபத்திய காலமாக இந்தியாவில் அதானி குழும நிறுவனங்கள் விஸ்வரூப வளர்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக கடந்த ஆறு மாத காலகட்டத்தில் அதானி குழுமத்தின் வளர்ச்சி விகிதமானது, 88.1% வளர்ச்சி கண்டுள்ளது.

இது குறித்து பர்கண்டி ரைவேட் ஹூருன் இந்தியா 500-ன் சிறப்பு அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் முதல் 500 நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது 2% மட்டுமே அதிகரித்துள்ளது.

யார் முதலிடம்

இதே வழக்கமாக அதானியை விட முன்னிலையில் இருக்கும் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 13.4% வளர்ச்சி கண்டு, 18.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதே டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் மதிப்பு 0.9% அதிகரித்து, 12.97 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து 2வது இடத்திலும் உள்ளது. அதனை தொடர்ந்து ஹெச் டி எஃப் சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி ஆகியவை உள்ளன.

அரசு சாரா முதல் 500 நிறுவனங்கள்

அரசு சாரா முதல் 500 நிறுவனங்கள்

ஆக்ஸிஸ் வங்கியின் வனிகமான பர்கண்டி பிரைவேட் மற்றும் ஹூருன் இந்தியா இணைந்த இந்த பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா 500 என்ற லிஸ்டினை வெளியிட்டுள்ளன, இது இந்தியாவில் உள்ள மதிப்புமிக்க அரசு சாரா நிறுவனங்களின் பட்டியலில் முதல் 500 நிறுவனங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை கண்கானிக்கும். இது கடந்த அக்டோபர் 30, 2021 முதல் ஏப்ரல் 30, 2022 வரை கண்கானிக்கப்படுகின்றது.

அதானி கிரீன் எனர்ஜி & அதானி பவர்
 

அதானி கிரீன் எனர்ஜி & அதானி பவர்

அதானி கிரீன் எனர்ஜி 2,62,238 கோடி ரூபாயில் இருந்த மதிப்பு, 4,50,874 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த 6 மாத காலகட்டத்தில் 139% ஏற்றம் கண்டுள்ளது.

இதே அதானி பவரின் மதிப்பு 157.8% அதிகரித்து, 1,08,129 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. (66,185 கோடி ரூபாய்)

அதானி வில்மர் &  அதானி டோட்டல் கேஸ்

அதானி வில்மர் & அதானி டோட்டல் கேஸ்

அதானி வில்மரின் மதிப்பானது 189.8% அதிகரித்து, 1,01,427 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. (66,427 கோடி ரூபாய்)

அதானி டோட்டல்ஸ் கேஸ் மதிப்பானது 1,07,3256 கோடி ரூபாய் அதிகரித்து, 2,69,558 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதானி டிரான்ஸ்மிஷன் & அதானி எண்டர்பிரைசஸ்

அதானி டிரான்ஸ்மிஷன் & அதானி எண்டர்பிரைசஸ்

இதே அதானி டிரான்ஸ்மிஷன் மதிப்பானது 1,00,660 கோடி ரூபாய் அதிகரித்து, 3,06,792 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மதிப்பானது 93,557 கோடி ரூபாய் அதிகரித்து, 2,65,848 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

அம்பானியா Vs அதானியா

அம்பானியா Vs அதானியா

மொத்தத்தில் அதானி குழுமத்தில் உள்ள மொத்தம் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 17.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 500 நிறுவனங்காளின் மொத்த மதிப்பில் இது 7.6% ஆகும்.

மொத்த அதானி குழும நிறுவனங்களின் மதிப்பும் கணிசமான வளர்ச்சியினை எட்டியிருந்தாலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 13.4% வளர்ச்சி கண்டு, 18.87 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்த மதிப்பில் பார்க்கும்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமே முதலிடம் பிடித்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani group valuation growth at 88%, Ambani’s reliance industries growth 13.4%: No. 1 to whom?

Although the total value of Adani Group companies has grown by 88%, its total value stands at Rs 17.6 lakh crore. The same Reliance Industries grew by only 13.4% to Rs 18.87 lakh crore.

Story first published: Wednesday, June 15, 2022, 19:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.