குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இதுகுறித்து மம்தா பானர்ஜி, சரத் பவார் ஆகியோர் ஆலோசித்தனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிகிறது. இந்நிலையில் அதற்கு முன்னதாக குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று மனுத்தாக்கல் தொடங்க உள்ள நிலையில், ஜூன் 29ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய கடைசி நாள்.
மனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை தொடர்ந்து ஜூலை 21ஆம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒருமித்த முடிவுடன் வேட்பாளரை நிறுத்த மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM