கனடாவில், தன்னைப் பெற்ற தாயை சுட்டுக்கொன்ற கனடா நடிகர் ஒருவர், தன் தாய் படப்போகும் பாடுகளைத் தவிர்ப்பதற்காக அவரைக் கொன்றதாக நீதிமன்றத்தின் முன் விளக்கம் அளித்துள்ளார்.
புகழ்பெற்ற திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளவரான கனேடிய நடிகரான Ryan Grantham (24) என்பவர், 2020ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 31ஆம் திகதி, வீட்டில் பியானோ வாசித்துக்கொண்டிருந்த தன் தாயாகிய Barbara Waite (64)என்பவரை, பின்னாலிருந்து தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
மறுநாள், மூன்று துப்பாக்கிகள், குண்டுகள், பெட்ரோல் குண்டுகள் முதலான ஆயுதங்களுடன் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கொல்லும் நோக்கத்துடன், அவரது வீட்டை நோக்கிப் புறப்பட்டுள்ளார் Ryan. பின்னர் தானாகவே பொலிசாரிடம் சரணடைந்துள்ளார் அவர்.
இந்நிலையில், நேற்று பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றம் முன் விளக்கம் அளித்த Ryan, தான் தன் தாயைக் கொடுமைப்படுத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், அவர் தன் கையால் அனுபவிக்கப்போகும் கொடுமைகளிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காகவே அவரைத் தான் சுட்டுக் கொன்றதாகவும் விளக்கமளித்துள்ளார்.
விசாரணை தொடர்கிறது…