இஸ்ரேல் நாட்டில் சபிக்கப்பட்ட கல்லறை ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். “இதை யாரும் திறக்க வேண்டாம்” என்று அதற்கு மேல் ரத்த சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட எச்சரிக்கை உள்ளது.
யுனெஸ்கோ பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் நடைபெற்ற ஆய்வில் முதன்முறையாக ஒரு கல்லறை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளாக அதனை யாரும் திறக்க முற்படவில்லை. அப்பகுதியில் ஓராண்டுக்கும் மேலாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது.
கல்லறையைத் தோண்டித் திருடும் திருடர்களை எச்சரிப்பதற்காக அவ்வாறு எழுதப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்