அனல் மின்நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்த தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் பல மாநிலங்களை சேர்ந்த ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வந்தனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பரசுராம் சிங் பணியாற்றி வந்தார். சம்பவதன்று, கன்வேயர் பெல்ட்டில் நிலக்கரி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் 30 அடி பள்ளத்தில் இருந்து கீழே விழுந்தார். பலத்தகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.