கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இரு குடும்பங்கள் மோதலில் ஈடுபட்ட காட்சி வெளியாகியுள்ளது.
சொத்து பிரச்னை காரணமாக ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் ஸ்ரீரங்கபட்டணா நகர அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை பார்ப்பதற்கு உறவினர்களும், எதிர்தரப்பினரும் வந்துள்ளனர். அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள் இருபிரிவினரையும் சமாதானம் செய்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியுள்ளனர். அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மோதல் குறித்த வீடியோ பரவும் நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM