ஆந்திர மாநிலம் ஏலூர் அருகே, அரசுப் பள்ளியில் தேர்வெழுத வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை, மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
ஜங்கரெடிகுடெம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பொதுத் தேர்வு எழுத வந்த மாணவிக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சீனிவாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், ஆத்திரமடைந்த பெற்றோரும் அவரது உறவினர்களும் பள்ளிக்கே சென்று ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.