அல்வலீத் பின் தலால் இனி தனி ஆள் இல்லை.. வேற லெவல் கூட்டணி..!

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் தலால் தனது வர்த்தகத்தைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தனது முதலீட்டு நிறுவனத்தைத் தனி ஆளாக நிர்வாகம் செய்து வந்த நிலையில், தற்போது பெரும் பண பலத்துடன் உடன் இருக்கும் சவுதி அரேபியாவின் அரசு நிறுவனத்தின் துணை கிடைத்துள்ளது.

இனி ஆட்டம் வேற லெவலில் இருக்கும் என தெரிகிறது.

அல்வலீத் பின் தலால்

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் தலால் தலைமையிலான கிங்கடம் ஹோல்டிங் நிறுவனம் சிட்டி குரூப் முதல் உபர் முதல் ட்விட்டர் வரையிலான நிறுவனங்களில் முதலீடு செய்து நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை தனியாக சம்பாதித்துள்ளார்.

கிங்கடம் ஹோல்டிங்

கிங்கடம் ஹோல்டிங்

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்வலீத் பின் தலால் தனியாக நிர்வாகம் செய்து வரும் கிங்கடம் ஹோல்டிங் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் பல முன்னணி நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் நிறுவனம் கிங்கடம் ஹோல்டிங் பங்குகளை கைபற்றி முக்கிய பங்குதாரராக விளங்குகிறது.

பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்
 

பப்ளிக் இன்வெஸ்ட்மென்ட் பண்ட்

சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் கச்சா எண்ணெய் தாண்டி புதிய வர்த்தக துறையில் இறங்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில் பல மாறுப்பட்ட கருத்து, பகை இருந்தாலும் கிங்கடம் ஹோல்டிங் நிறுவனத்தின் முதலீடு செய்து உள்ளார்.

16.87 சதவீத பங்குகள்

16.87 சதவீத பங்குகள்

கிங்டம் ஹோல்டிங் நிறுவனத்தில் அல்வலீத் பின் தலால் அதிகப்படியான ஆதிக்கம் செய்து வந்த நிலையில் சவுதி அரசு நிறுவனமான PIF 16.87 சதவீத பங்குகளை 1.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றிய பின்பு குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை கைப்பற்றியுள்ளது. முகமது பின் சல்மான் சவுதி அரசை கைப்பற்றிய பின்பு ஊழல் குற்றச்சாட்டில் அல்வலீத் பின் தலால்-ம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறைவாசம்

சிறைவாசம்

4 வருடத்திற்கு முன்பு முகமது பின் சல்மான் ஊழல்-க்கு எதிராக எடுத்த நடவடிக்கையில் அல்வலீத் பின் தலால் உட்பட பல தொழிலதிபர்கள், தலைவர்கள் என பலர் ரியாத்-ல் இருக்கும் Ritz-Carlton ஹோட்டலில் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

சொத்து விபரங்கள்

சொத்து விபரங்கள்

சுமார் 3 மாத பேச்சுவார்த்தைக்கு பின்பு கைது செய்யப்பட்டவர்கள் தங்களது சொத்து விபரங்களை முழுமையாக அளித்துவிட்டு, அரசு ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்பு தான் வெளியே வந்தனர். தற்போது அல்வலீத் பின் தலால் நிறுவனத்தில் சவுதி அரசு நிறுவனமான PIF முதலீடு செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Prince Alwaleed bin Talal kingdom Holdings rules with Saudi Arabia’s PIF

Prince Alwaleed bin Talal kingdom Holdings rules with Saudi Arabia’s PIF

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.