குடிநீர் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு; ஐஐடி பேராசிரியருக்கு ரூ.2 கோடி பரிசுடன் விருது

சென்னை ஐ.ஐ டி-யில் பேராசிரியராக பணிபுரியும் தலப்பில் பிரதீப் மற்றும் அவரது குழு, தண்ணீர் தொடர்பான ஆராய்ச்சியில், புதிய கண்டுபிடிப்பை கண்டறிந்துள்ளனர். குடிநீரில் இருந்து ஆர்சனிக்கை விரைவில் அகற்றும் புதிய தொழில்நுட்பத்தையும், மலிவு விலையில் நானோ அளவில் பொருட்களை உருவாக்கியதற்காகவும், இவருக்கும் இவரது குழுவிற்கும் ‘இளவரசர் சுல்தான்பின் அப்துல்அஜிஸ் விருது’ வழங்கப்பட உள்ளது.

சென்னை ஐஐடி

தண்ணீர் துறையில் சுற்றுசூழலுக்கு உகந்த புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததற்காக, இவ்விருதுக்கு, தலப்பில் பிரதீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி, நியூயார்க் நகரம், ஐ.நா தலைமையகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில், இவர்களுக்கு பரிசுத்தொகையாக 2 கோடி ரூபாயும், தங்கப்பதக்கம், கோப்பை, சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. விருதுக்கு தேர்வாகியுள்ள குழுவினரை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.