சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் 6 வார காலத்திற்குள் ஏற்படுத்தப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவரின் வழக்கில் மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது. புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும் எனவும் மெட்ரோ தெரிவித்திருக்கிறது.