கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை (10) இரவு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
வருடாந்தம் ஆறு கிராம மக்களால் மிகவும் தொன்று தொட்டு கண்ணகை அம்மன் ஆலத்தில் சடங்குகள் இடம்பெற்று வருகின்றன.
சிவஸ்ரீ.கு.தேவராசா தலைமையிலான கட்டாடியார்களால் சடங்குகள் நடைபெற்று வருகின்றன.
சடங்கு காலத்தில் ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி கண்ணகை அம்மன் வழங்குரை படித்தல் இடம்பெற்று வருகின்றமை சிறப்பம்சமாகும்.
கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களைக் கொண்டு சடங்குகள் இடம்பெற்றன. இம்முறை அது தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பக்கதர்கள் கலந்து கொண்டனர்.