தமிழகத்தில் கந்துவட்டி, மீட்டர் வட்டி தொடர்பாகக் கடந்த ஒரு வாரத்தில் 124 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக டிஜிபி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
பெறப்பட்ட புகார்களில் 89 புகார்கள் மீது வழக்குப்பதிந்து, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 40 இலட்ச ரூபாய் மதிப்புள்ள புரோநோட், பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் கடலூர் மாவட்டம் புவனகிரியில் கந்துவட்டிக் கொடுமையால் ஆயுதப்படைக் காவலர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.