உலகின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் தங்கள் நிறுவனத்தின் விளம்பரப் பிரிவில் உள்ள 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட வார்னர் பிரதர்ஸ், டிஸ்கவரி நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனம் கடந்த 1923 ஆம் ஆண்டு ஹாரி வார்னர், ஆல்பர்ட் வார்னர், சாம் வார்னர் மற்றும் ஜாக் வார்னர் ஆகிய நான்கு சகோதரர்களால் நிறுவப்பட்டது.
கோவை – ஷீரடி தனியார் சிறப்பு ரயில்: கட்டணம் எவ்வளவு? என்னென்ன வசதிகள்?
வார்னர் பிரதர்ஸ்
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்கள், அனிமேஷன் திரைப்படங்கள் உருவாகி உள்ளது என்பதும், அவை உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்று மில்லியன் கணக்கில் வசூலையும் குவித்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
1000 ஊழியர்கள்
இந்த நிலையில் வார்னர் பிரதர்ஸ் தனது விளம்பர பிரிவில் உள்ள 1000 ஊழியர்கள் அல்லது 30% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விளம்பர குழு
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் விளம்பர குழுவின் ஊழியர்களுக்கு, நிறுவனம் தானாகவே முன்வந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு வழங்க தொடங்கியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
என்ன காரணம்?
தொற்று நோய்களால் ஏற்பட்ட எழுச்சிக்குப் பிறகு ஸ்ட்ரீமிங் தொழில் துறை மிகவும் மந்த நிலையில் காணப்படுகிறது என்றும் பணவீக்கம், குறைந்த நுகர்வோர் மற்றும் செலவினங்கள் ஆகிய காரணங்களே வார்னர் பிரதர்ஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
விருப்பம்
வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இந்த முடிவு அந்நிறுவனத்தின் விளம்பர குழுவில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்பதால் பலர் தாமாகவே முன்வந்து நிறுவனத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Warner Bros Discovery to cut nearly 1,000 ad sales jobs!
Warner Bros Discovery to cut nearly 1,000 ad sales jobs! | 1000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறதா வார்னர் பிரதர்ஸ்? என்ன காரணம்?