ஐதராபாத்: புஷ்பா 2 படத்தில் ஜூலை மாதம் முதல் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன்.அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்பட பலர் நடித்த படம் புஷ்பா. முதல் பாகம் இந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. இந்த படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். பான் இந்தியா படமாக வெளிவந்து நாடு முழுவதும் நல்ல வசூலை ஈட்டியது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் இந்த ஸ்கிரிப்ட் பணி சமீபத்தில் முடிந்துவிட்டது. அதன்படி ஜூலையிலிருந்து இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதிலும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் நடிப்பதற்காக அடுத்த ஒரு வருடத்துக்கு வேறு எந்த படமும் அல்லு அர்ஜுன் ஒப்புக்கொள்ளவில்லை. இப்படத்தை டிசம்பரில் படமாக்கி முடித்து, அடுத்த ஆண்டு ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர முயற்சி நடக்கிறது. புஷ்பா 2 படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் கால்ஷீட் தருவார். அதுவரை அவர் தாடியும் நீளமான தலைமுடியும் எடுக்க மாட்டார் என படக்குழு தெரிவித்துள்ளது