தூத்துக்குடியில் செயின் பறிப்பு திருடன் ஒருவன் தன்னை பொதுமக்கள் தாக்கியதாக நீதிபதியிடம் புகாரளித்த நிலையில், நீதிபதியின் உத்தரவின் பேரில் திருடனை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெருமாள்குளத்தைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற போது, மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் பலத்த காயமடைந்த செல்வமுருகன் சிகிச்சைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, தான் ஊர்மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டதாக செல்வமுருகன் புகார் தெரிவித்ததை அடுத்து, தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.