வல்லரசு நாடாக இருந்தாலும் சரி, வளரும் நாடாக இருந்தாலும் சரி அனைத்து வர்த்தகம் மற்றும் பொருளாதார சரிவுக்கு அடிப்படை காரணமாக இருப்பது பணவீக்கம் மட்டுமே.
அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா போன்ற பல முன்னணி பொருளாதார நாடுகளில் பணவீக்கம் அதிகரிப்பால் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகிறது. இதனால் முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் நாணய மதிப்பை தலைகீழாகப் புரட்டிப்போட்டு உள்ளது. இதன் வாயிலாக கிரிப்டோகரன்சி விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதன் வாயிலாகப் பொருளாதார சரிவு, ரெசிஷன் என பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வரும் காரணத்தாலும், கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சேவை நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய துவங்கியுள்ளது.
எல்ஐசிக்கே இப்படி ஒரு நிலையா.. வாங்கி வைத்த போர்ட்போலியோ பங்குகளின் நிலை என்ன தெரியுமா?
காயின்பேஸ்
உலகின் முன்னணி கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் சேவை நிறுவனமான காயின்பேஸ் சிஇஓ தனது ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த பொருளாதார வீழ்ச்சியின் போது நிறுவனம் நிதியியல் அடிப்படையில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதற்காக, 18 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
18% ஊழியர்களை பணிநீக்கம்
காயின்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பிரையன் ஆம்ஸ்ட்ராங் 18 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவை கனத்த மனதுடன் எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்நிறுவனத்தில் 1,250 ஊழியர்கள் இருந்தனர்.
BlockFi பணிநீக்கம்
இதேபோல் மற்றொரு கிரிப்டோகரன்சி நிறுவனமான BlockFi திங்கட்கிழமை கடினமான சந்தை நிலைமைகளுக்கு மத்தியில் மூலோபாய மதிப்பாய்வு செய்யும் பொருட்டு மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்த பணிநீக்கம் BlockFi நிறுவனத்தில் அனைத்து துறையிலும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணவீக்கம்
அமெரிக்காவின் பணவீக்கம் பல தசாப்தங்களில் அதிகப்படியான உயர்வை எட்டியுள்ளது. இதேபோலே போர் பதட்டங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்பட்டு உள்ள பாதிப்புகள் பெரிய அளவில் இருக்கும் நிலையில் நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேறு வழி இல்லாமல் பணிநீக்கம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
பிட்காயின் விலை
கடந்த 7 நாளில் பிட்காயின் விலை 30.02 சதவீதம் சரிந்து 21,178.75 டாலராக உள்ளது, இதேபோல் எதிரியம் 36.24 சதவீதம் சரிந்து 1,140.66 டாலராக உள்ளது. பினான்ஸ் 25.94 சதவீதம் சரிந்து 213.21 டாலராகவும், கார்டானோ 27.71 சதவீதம் சரிந்து 0.4627 டாலராக உள்ளது.
BlockFi layoff 20 percent employees, Coinbase layoff 18 percent employees amid economic slowdown
BlockFi layoff 20 percent employees, Coinbase layoff 18 percent employees amid economic slow down அடுத்தடுத்து பணிநீக்கம்.. அரண்டு போய் நிற்கும் ஊழியர்கள்..!