தேனி மாவட்ட பேரூராட்சிகளில் எல்.இ.டி பல்பு வாங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் பெண் உதவி இயக்குனர் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2019 – 2020ம் ஆண்டுகளில் பல்புகள் வாங்குவதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி முன்னாள் பெண் உதவி இயக்குனர், 11 ஊராட்சிகளின் செயல் அலுவலர்கள், எலக்ட்ரிக் பொருட்களை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளர், அவரது மனைவி மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.