டிசம்பருக்குள் இவ்வளவு உயருமா ரெப்போ வட்டிவீதம்? ஆய்வுக்கட்டுரையில் அதிர்ச்சி தகவல்!

ஃபிட்ச் என்ற கடன் தர ரேட்டிங் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் பணவீக்கம் மோசமடைந்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கி டிசம்பர் 2022க்குள் வட்டி விகிதங்களை 5.9 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

இந்தியாவின் மோசமான பொருளாதாரம், பொருட்களின் விலை உயர்வு மற்றும் இறுக்கமான உலகளாவிய நாணய கொள்கை ஆகியவையே வட்டி விகிதம் உயர காரணமாக கருதப்படுகிறது.

பணவீக்கம் மோசமடைந்து வருவதை கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 2022 டிசம்பரில் மேலும் 5.9 சதவீதமாகவும், 2023 இறுதிக்குள் 6.15 சதவீதமாகவும் உயர்த்தும் என்றும், அதேபோல் 2024ஆம் ஆண்டில் மாற்றமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் பிட்ச் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிட்ச் நிறுவனம்

கடன் தர ரேட்டிங் நிறுவனமான பிட்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் படி நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் அதன்படி 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என்றும் டிசம்பரில் 5.9 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

‘உலக பொருளாதாரக் கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் உள்ள ஆய்வுக் கட்டுரையில் மேலும் கூறியிருப்பதாவது: இந்தியா மோசமான வெளிப் புறச்சூழலால் பாதிக்கப்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

நிதிக்கொள்கை
 

நிதிக்கொள்கை

அதேபோல் உலக அளவில் நிதிக்கொள்கை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதால் வட்டி விகிதம் உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஆகியவை இந்தியாவின் பொருளாதாரத்தை பெரிதும் பாதிப்பதாக அந்த ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

பண வீக்கத்தை குறைக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது எடுத்து வரும் நடவடிக்கைகளில் ஒன்று வட்டி விகிதம் உயர்த்துவது என்றும், 2002 டிசம்பரில் 5.9% என்றும், 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் 6.15 சதவீதம் வரை ரெப்போ விகிதம் உயர்த்தப்படலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இதில் சில மாறுதல் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதம் பணவீக்கம் அதிகரித்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்றும், காய்கறிகள், மளிகை பொருட்கள், எண்ணெய் பொருள்கள், பழங்கள் ஆகிய அத்தியாவசிய பொருள்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் கடந்த 3 மாதத்தில் உணவுப்பொருள்களின் பணவீக்கம் 7.3% அதிகரித்துள்ளதாகவும் அதேபோல் மருத்துவத்திற்காக மக்கள் செலவிடும் தொகை பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் அந்த ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஜிடிபி வளர்ச்சி

ஜிடிபி வளர்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததன் காரணமாக ஏப்ரல், ஜூன் மாதங்களில் நுகர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கவில்லை என்றும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலாண்டில் ஜிடிபி 4.1% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது என்றும், ஆனால் 4.8 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்ததாகவும் பிட்ச் ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

நடப்பு நிதியாண்டில் 8.5 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்து இருந்தாலும் அது 7.8 சதவீதமாக உள்ளது என்றும் பிட்ச் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fitch expects RBI to raise interest rates to 5.9% by December-end

Fitch expects RBI to raise interest rates to 5.9% by December-end | டிசம்பருக்குள் இவ்வளவு உயருமா ரெப்போ வட்டிவீதம்? ஆய்வுக்கட்டுரையில் அதிர்ச்சி தகவல்!

Story first published: Wednesday, June 15, 2022, 7:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.