எல்.ஐ.சியை சோலி முடிச்சாச்சு, அடுத்தது யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸா?

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ சமீபத்தில் பட்டியலிட்ட நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிவில் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் எல்.ஐ.சியை அடுத்து பொது காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசு ஏற்கனவே ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் திட்டங்களைப் பற்றிய விவாதத்தை தொடங்கி உள்ளதாக செய்தி வெளியான நிலையில் அந்த பொது காப்பீட்டு நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தனியார்மயம்

ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்குவது குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டதாகவும் முறையான அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேசியபோது இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முன்மொழிகிறது என்பதை அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் அவர் கூறிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமாக இருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

 3 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
 

3 இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தவிர, நேஷனல் இன்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இன்சூரன்ஸ் மற்றும் ஆகிய அரசு நடத்தும் 3 பொது காப்பீட்டு நிறுவனங்களும் தனியார் மயமாக்க வாய்ப்பில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்

மூன்று நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் நல்ல லாபத்தை பெற்று உள்ளது என்றும் அதேபோல் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிக மூலதனத்தையும் பெற்றுள்ளது என்றும் தெரிகிறது. எனவே யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மட்டுமே தனியார்மயமாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே இந்த தகவல் உறுதி செய்யப்படும்.

பாலிசி

பாலிசி

கடந்த 1938அம் ஆண்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது மற்றும் 1972ல் தேசியமயமாக்கப்பட்டது. இந்த நிறுவனம் 1340 அலுவலகங்களில் 18,300 பணியாளர்களை கொண்டு உள்ளது என்பதும் ஒரு கோடிக்கும் அதிகமான பாலிசிதாரர்களுக்கு காப்பீடு வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் மோட்டார் இன்சூரன்ஸ், ஹெல்த் இன்சூரன்ஸ் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி
வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

United India Insurance may be up for privatisation

United India Insurance may be up for privatisation | எல்.ஐ.சியை சோலி முடிச்சாச்சு, அடுத்தது யுனிடெட் இந்தியா இன்சூரன்ஸா?

Story first published: Thursday, June 16, 2022, 7:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.