இஸ்லாமாபாத்: அந்நியச் செலாவணி செலவை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு முக்கிய வழியாக தேநீர் பருகுவதை கணிசமாக குறைத்துக் கொள்வது நாட்டின் கஜானாவுக்கு நல்லது என்று பாகிஸ்தான் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இறக்குமதிக்காக செலவு செய்யும் அந்நிய செலாவணியை குறைக்கும் விதமாக தேநீர் குடிப்பதை குறைக்க வேண்டும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
“கடனில் தேயிலையை இறக்குமதி செய்வதால், தேநீர் நுகர்வை தினசை 1-2 கப் வரை குறைக்க வேண்டும் என பாகிஸ்தான் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று மத்திய திட்டமிடல் அமைச்சர் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேநீர் பருகுவதை நாளொன்றுக்கு இரண்டு கோப்பைகளாக குறைத்தால் பாகிஸ்தான் அந்நிய செலாவணி கையிருப்பு குறையாது. ஏற்கனவே பொருளாதாரம் தள்ளாடும் நிலையில் பணப்பற்றாக்குறையில் உள்ள பாகிஸ்தான் அரசு, தேயிலை நுகர்வைக் குறைக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மின்சார கட்டண உயர்வால் தத்தளிக்கும் பாகிஸ்தானிகள்
2021-22 நிதியாண்டில் பாகிஸ்தான் 83.88 பில்லியன் (USD 400 மில்லியன்) மதிப்பிலான தேயிலையை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தகக்து. இதன் பிறகுதான், பாகிஸ்ஹானின் மத்திய திட்டமிடல் அமைச்சர் அஹ்சன் இக்பால் இந்த வேண்டுகோள் விடுத்தார் என்று தி நியூஸ் இன்டர்நேஷனல் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக அளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் பாகிஸ்தான், அதை இறக்குமதி செய்ய கடன் வாங்க வேண்டியுள்ளது என்றார்.
கடந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் ஆவணம், முந்தைய நிதியாண்டை விட ரூ.13 பில்லியன் (USD 60 மில்லியன்) மதிப்புள்ள தேயிலையை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2020-21 நிதியாண்டில், தேயிலை இறக்குமதிக்காக ரூ. 70.82 பில்லியன் (340 மில்லியன் டாலர்) செலவிடப்பட்டதாக நியூஸ் நெட்வொர்க் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்
பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரியில் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. அது, 2022 ஜூன் முதல் வாரத்தில் 10 பில்லியனுக்கும் குறைவாகக் குறைந்தது. அது நாட்டின் பொருளாதார சிக்கல்களை அதிகரித்துள்ளது.
நாட்டிற்குத் தேவையான இறக்குமதிகளின் இரண்டு மாதச் செலவை ஈடுகட்டக்க்கூட இந்த அந்நிய செலாவணி கையிருப்பு போதாது என்பது அந்நாட்டிற்குக் கவலைகளை கொடுத்துள்ளது.
கடந்த மாதம், அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, டஜன் கணக்கான அத்தியாவசியமற்ற ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்வதை பாகிஸ்தான் அரசாங்கம் கட்டுப்படுத்தியது.
மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறதா; வெளியான பரபர தகவல்
எரிசக்தியை சேமிப்பதற்காக நாட்டில் இயங்கும் கடைகள் மற்றும் சந்தைகளை இரவு 8:30 மணிக்குள் மூடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நாட்டின் திட்டமிடல் அமைச்சர் கூறினார். இது பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி கட்டணத்தை குறைக்க உதவும் என்று இக்பால் கூறினார்.
நாடு கடுமையான முடிவுகளை எடுக்காவிட்டால் பாகிஸ்தானின் பொருளாதாரம் இலங்கையின் பொருளாதார நிலையைப் போன்றே இருக்கும் என்று அண்மையில் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் எச்சரித்திருந்தார்.
உலகில் அதிகமாக தேயிலை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான், அந்நிய செலாவணி செலவினங்களை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக, தேநீர் குடிப்பதை குறைக்க அறிவுறுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR
Cash-strapped Pakistan urges people to reduce tea consumption to save precious forex