டெல்லி மற்றும் அதன் அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் நேற்றிரவு முதல் கனமழை கொட்டி வருகிறது.
டெல்லியின் கன்னாட் பிளேஸ் உள்ளிட்ட மையப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழைகொட்டியதால் கடந்த சில நாட்களாக வெப்பத்தில் உழன்ற மக்களுக்கு குளிர்ச்சி கிடைத்தது.
இதனிடையே உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் நொய்டா உள்ளிட்ட நகரங்களையும் இரவு முதல் கன மழை ஆக்ரமித்துள்ளது.
இன்றும் டெல்லியின் பல பகுதிகளிலும் ஹரியானாவிலும் 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.