ஏலத்தில் கிடைத்த ரூ.48 ஆயிரம் கோடி எப்படி பிரிக்கப்படும்? சிஎஸ்கே அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?

சமீபத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகால ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பும் உரிமைக்கான ஏலம் நடைபெற்றது என்பது தெரிந்ததே.

இந்த ஏலத்தில் பிசிசிஐக்கு மொத்தம் ரூ.48,390 கிடைத்தது என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும்.

இந்த நிலையில் ஏலத்தில் கிடைத்த ரூ.48,390 கோடியை பிசிசிஐ எவ்வாறு ஐபிஎல் அணிகள், வீரர்கள் மற்றும் மாநில வாரியங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐபிஎல் டி20

உலகிலேயே அதிக வருமானம் தரும் லீக் தொடர்களில் ஒன்றான ஐபிஎல் டி20 ஒளிபரப்பு உரிமையை பெறுவதற்கு பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டு ஏலம் கேட்டன என்பதும் கடைசியில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஏலத்தில் பிசிசிஐக்கு ரூ.48,390 கோடிகள் கிடைத்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஏலம்

ஏலம்

ஆசிய கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பும் உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, உலக நாடுகளுக்கு ஒளிபரப்பு உரிமை, என பிசிசிஐ 4 பிரிவுகளாக ஏல வகையை பிரித்தது.

ஹாட்ஸ்டார்
 

ஹாட்ஸ்டார்

ஜூன் 12-ஆம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற இந்த ஏலத்தில் டிஸ்னி ஸ்டார் நிறுவனம் தொலைக்காட்சி உரிமத்தையும், டிஜிட்டல் உரிமையை வியாகாம் நிறுவனமும், வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமையை வியாகாம் மற்றும் டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனங்களும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ

பிசிசிஐ

இந்தநிலையில் பிசிசிஐ அமைப்புக்கு கிடைத்துள்ள ரூ.48,390 கோடியை எந்தெந்த அணிகளுக்கு எப்படி பிரித்துக் கொடுக்கப் போகிறது என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

 8 அணிகள்

8 அணிகள்

ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு வரை 8 அணிகள் விளையாடியது என்பது தெரிந்ததே. அதாவது மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்ச் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய எட்டு அணிகளுக்கு ஏலத்தில் கிடைத்த தொகையில் 50 சதவீதம் பிரித்துக் கொடுக்கப்படும்.

 புதிய 2 அணிகள்

புதிய 2 அணிகள்

இந்த ஆண்டு புதிதாக வந்துள்ள குஜராத் மற்றும் லக்னோ அணிகளுக்கு மற்ற எட்டு அணிகளுக்கு வழங்கப்பட்ட தொகை வழங்கப்படாது என்றாலும் ஒரு சிறு தொகை வழங்கப்படும் என்றும் ஆனால் அதற்கும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

 எவ்வளவு கிடைக்கும்?

எவ்வளவு கிடைக்கும்?

அந்த வகையில் ஏலத்தில் கிடைத்த ரூ.48,390 தொகையில் 50 சதவீத பணத்தை 8 அணிகளுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகளுக்கு சுமார் 3,000 கோடி கிடைக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.

வீரர்கள்

வீரர்கள்

மீதமுள்ள 50 சதவீத தொகையில் 26 சதவீத தொகையை மாநிலங்கள் மற்றும் சர்வதேச வீரர்களுக்கு வழங்கும் என்றும் மீதமுள்ள 24 சதவீத தொகையை ஊழியர்களின் சம்பளம், மைதான பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு வைத்துக் கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

வீரர்களுக்கு ரூ.6,500 கோடி

வீரர்களுக்கு ரூ.6,500 கோடி

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு மட்டும் 6,500 கோடி ஒதுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால் ஒவ்வொரு வீரருக்கும் பல கோடிகள் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Will BCCI Share Rs 48,390 Crore Among Franchises, Players And State Associations

How Will BCCI Share Rs 48,390 Crore Among Franchises, Players And State Associations | ஏலத்தில் கிடைத்த ரூ.48 ஆயிரம் கோடி எப்படி பிரிக்கப்படும்? சிஎஸ்கே அணிக்கு எவ்வளவு கிடைக்கும்?

Story first published: Thursday, June 16, 2022, 7:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.