கென்யாவில் முதலைகள் நடுவே சிக்கிய சிங்கம் ஒன்று தப்பிய வீடியோ வைரலாகியுள்ளது.
கென்யாவின் மசாய் மாரா தேசிய ரிசர்வ் பகுதியில் உள்ள நீர்நிலையில், சிங்கம் ஒன்று இறந்த நீர்யானையின் மீது நிற்கும்போது, சுமார் 40 முதலைகள் அதனை சுற்றி வளைத்தன.
இதனால் பதறிப் போன சிங்கம் தப்பிக்க வழி தேடியது. பசியுடன் இருக்கும் முதலைகள் சிங்கத்தை வேட்டையாட துடித்தன.
பரபரப்பான சூழலில் முதலைகளின் இடையே எகிறி குதித்த சிங்கம், விறு விறுவென நீரில் நீந்தி கரைக்கு சென்று தப்பித்தது.
ஆண்டனி பெசி என்பவர் இந்த திக் திக் வீடியோவை படமாக்கினார்.
இந்த வீடியோ Compass Media என்ற யூடியூப் சேனலில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதனை பார்த்த சிங்கத்தை தைரியத்தையும், சாதுரியமாக தப்பித்ததையும் பாராட்டி வருகின்றனர்.
மேலும், இறந்துப்போன அந்த நீர்யானையின் சடலம் மட்டும் அங்கு இல்லை என்றால், சுற்றி வளைத்து நின்ற அந்த முதலைகள், முன்பு இருப்பதை விட மேலும் முரட்டுத்தனமாக இருந்திருக்கக் கூடும் என சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.