ஆண்களுடன் டேட்டிங் செல்ல வற்புறுத்திய மகள் : பிரபல நடிகை சொன்ன உண்மை

பிரபல நடிகையும் பாடகியுமாக சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி தனது மகள் தன்னை டேட்டிங் செல்ல வற்புறுத்துவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிலுக்கம்பெட்டி என்ற படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி. தொடர்ந்து தமிழில் சிவரஞ்சனி. கன்னடத்தில், விஷ்வா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர் ஒரு சில இந்தி படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் பாடகியாகவும் இருக்கும் சுசித்ரா ஒரு சில படங்களில் பாடல்கள் பாடியுள்ளார்.

இவர் கடைசியாக இந்தியில் போல் புலேவியா 2 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த மாதம் 20-ந் தேதி வெளியானது. சின்னத்திரையிலும் நடித்து வரும் சுசித்ரா, நெவர் கிஸ் யுவர் பெஸ்ட் ஃபிரண்டு. கில்டி மைண்ட்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.  

இவர் கடந்த 1999-ம் ஆண்டு  சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குனர் ஷேகர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் கமல்ஹாசன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்தில் ரா ஏஜெண்டாக நடித்திருந்தார்.  எட்டு வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு கடந்த 2007ம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்த தம்பதிக்கு காவேரி கபூர் என்ற மகள் உள்ளார், அவர் இப்போது ‘நம்ம காதல் கதை’ என்ற புதிய திரைப்படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த  சுசித்ரா, விவாகரத்துக்குப் பிறகு தனது மகள் காவேரி தனது பெயரை டேட்டிங் வலைதளங்களில் பதிவுசெய்து, ஆண்களுடன் டேட்டிங் செய்யுமாக வற்புறுத்தினார். அதனால் ஒரு வருடமாக யாருக்கும் தெரியாத ஒரு ஆணுடன் தான் உறவில் இருந்ததாகவும், பின்னர் பிரிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தான் டேட்டிங் செய்ய விரும்பவில்லை என்பதை இப்போது தன் மகளுக்கு புரியவைத்ததாகவும், ஆண்கள் தனக்கு விரும்பத்தகாத சில செய்திகளை அனுப்பிய பிறகு டே்டிங் வலைதளத்தில் இருந்து தனது ப்ரொஃபைல் படங்களையும் நீக்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.