விஜய் 66 படத்தின் தலைப்பு இதுதானா?

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்கிறார் . தில் ராஜு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் . முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், ஷாம், பிரபு, யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி படத்திற்கு தெலுங்கில் Vaarasudu – வாரசுடு, தமிழில் வாரிசு என்று தலைப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.