சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரை திருமணம் செய்துள்ள வெளிநாட்டவர்களுக்கு விரைவாக குடியுரிமை கிடைக்கும்.
ஆனால், திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழும் ஜோடிகளுக்கு அந்த சலுகையை அளிக்க முடியாது என சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.
சுவிஸ் குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரை திருமணம் செய்துள்ள வெளிநாட்டவர் ஒருவர், திருமணம் செய்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், சுவிட்சர்லாந்தில் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பிறகும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
சுவிஸ் குடியுரிமை பெறுவதில் இரண்டு வகை உண்டு என்பதை பலரும் அறிந்திருக்கலாம். ஒன்று சாதாரண முறை, மற்றொன்று விரைவாக அல்லது எளிதாக குடியுரிமை பெறும் முறை.
சாதாரண நடைமுறையின் கீழ், வெளிநாட்டவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் ஆறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கவேண்டும், அதில் பல கூடுதல் நிபந்தனைகளும் இடம்பெறும்.
அதே நேரத்தில், சுவிஸ் குடிமக்களை திருமணம் செய்துள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் சுவிஸ் குடிமக்களின் பிள்ளைகள் (மற்றும் 2017 முதல் மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்கள்) விரைவான குடியுரிமை பெறும் நடைமுறையின்கீழ் சற்று எளிதாக குடியுரிமை பெற முடியும்.
ஆனால், இந்த திட்டம் முறைப்படி திருமணம் செய்துகொண்டு வாழும் தம்பதியருக்கு மட்டுமே. திருமணம் செய்யாமல் இணைந்து வாழும், அதாவது registered partnership என்ற முறையில் இணைந்து வாழும் ஜோடிகள் இந்த எளிதாக்கப்பட்ட அல்லது விரைவான குடியுரிமை பெறும் திட்டத்தின் கீழ் குடியுரிமை பெறமுடியாது.
பல ஆண்டுகளாக இது குறித்த மாறுபட்ட கருத்துக்கள் நிலவிவந்த மற்றும் நிலவிவரும் நிலையில், நேற்று, இந்த முடிவை சுவிஸ் தேசிய கவுன்சில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.