Cashback Offers: வோடபோன் ரீசார்ஜ் செய்தால் மொபைல் ரீசார்ஜ் ரூ.2,400 வரை கேஷ்பேக்!

Vodafone Idea Cashback Offers: நீங்கள் வோடபோன் ஐடியா பயனராக இருந்தால், இது உங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். தனியார் டெலிகாம் நிறுவனமான Vodafone Idea, அதன் பயனர்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் ரூ.2,400 வரை கேஷ்பேக் வெல்லலாம். ரூ.100 வீதம் மொத்தம் 24 முறை இந்த சலுகையை பயனர்கள் பயன்படுத்தலாம். இந்தச் சலுகை தற்போது 2ஜி போன்களைப் பயன்படுத்தும் பயனர்களுக்கானது.

Online Shopping: இத பாக்காம எந்த பொருளும் வாங்காதீங்க!

கேஷ்பேக்கிற்கு, பயனர்கள் 4ஜி யூசராக இருக்க வேண்டும். பயனர்களை 4ஜிக்கு மாற்ற வோடபோன் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. நிறுவனம் ரூ.299, மற்றும் அதற்கு மேல் வரம்பற்ற பேக் மூலம் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒரு ரீசார்ஜ் ஒன்றிற்கு ரூ.100 கேஷ்பேக் வழங்குகிறது.

5G: 4ஜியை விட 10 மடங்கு வேகமாம்! 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்..!

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ரூ.2400 முழு கேஷ்பேக்கிற்கு, குறிப்பிட்ட திட்டத்துடன் 24 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும். சில விதிகளும் இந்த கேஷ்பேக் திட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

4ஜி-க்கு மாற வேண்டும்

இந்தச் சலுகையைப் பெற நீங்கள் 2G கைபேசியைப் பயன்படுத்தும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளராக இருக்க வேண்டும். உங்களிடம் 2ஜி கைபேசி இருந்தால், அதை புதிய 4ஜி கைபேசியுடன் மாற்றவும்.

Nothing Phone (1): நத்திங் போன் (1) இருக்க… ஆப்பிள் ஐபோன் எல்லாம் எதுக்கு மக்களே!

நிறுவனம் இந்தச் சலுகையைக் குறித்து தகுதியுள்ள பயனர்களுக்கு செய்தியை அனுப்பி வருகிறது. 4ஜி கைபேசியை வாங்கிய பிறகு, ரூ.2400 கேஷ்பேக்கைப் பெற 24 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

கேஷ்பேக்கை சலுகையை பெற விஐ செயலி வேண்டும்

உள்வரும் கேஷ்பேக்கைச் சரிபார்க்க உங்கள் 4G ஸ்மார்ட்போனில் Vi செயலியை நிறுவவும். இந்த ஆப்ஸின் எனது கூப்பன்கள் பகுதிக்குச் சென்று உங்கள் கேஷ்பேக்கைக் கண்காணிக்கலாம். உங்கள் Vi ஆப்ஸில் வழக்கமான ரீசார்ஜ் செய்த பிறகு இந்த கேஷ்பேக் 24 முறை வரவு வைக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.