நாட்டின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான சுசுகி நிறுவனம், Intruder 150சிசி cruiser மாடல் பைக் உற்பத்தியினை நிறுத்தியுள்ளது.
ஏன் இந்த முடிவு? எதனால் உற்பத்தியினை நிறுத்துகிறது. வாருங்கள் பார்க்கலாம்.
கொரோனாவின் வருகைக்கு வாகன நிறுவனங்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக மூலதன பொருட்கள் விலையானது அதிகரித்த நிலையில், உற்பத்தி விலையும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வாகன விலைகளையும் அதிகரிக்கும் நிலைக்கு, வாகன நிறுவனங்கள் தள்ளப்பட்டன. இதற்கிடையில் வாகன நிறுவனங்கள் ப்லவேறு சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றன.
1 வாகனங்கள் கூட விற்பனை செய்யவில்லை
இப்படியொரு நிலையில், தான் சுசுகி நிறுவனம் கடந்த சில மாதங்களாக ஒரு வாகனங்களை விற்பனை செய்யவில்லை என அறிவித்துள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் 2021 முதல் மே 2022 வரையில் வரையில், Intruder 150சிசி cruiser மாடல் பைக்கினை ஒன்று கூட விற்பனை செய்யவில்லை என அறிவித்துள்ளது.
சில பிரச்சனைகள்
இதன் காரணமாகத் தான் இந்த ரக பைக் உற்பத்தியினை நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பைக் ஆரம்ப காலக்கட்டத்தில் நல்ல வரவேற்பினை பெற்ற ஒன்றாக இருந்து வந்தது. குறிப்பாக அதன் மாடல், ஸ்மூத் டிரைவிங், என பல நேர் மறையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் நாளடைவில் இதில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த வாகனத்தின் விற்பனையும் மோசமான சரிவினைக் கண்டது.
எப்போது அறிமுகம்
இந்த இருசக்கர வாகனமானது 2017ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பஜாஜ் அவெஞ்சருக்கு தொடருக்கு ஒரு சவாலாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அறிமுகத்திற்கு பிறகு 2018ம் ஆண்டில் சில புதுப்பிப்புகளும் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 2020ல் BS6 பைக்கினையும் அறிமுகப்படுத்தத்தியது. இதன் விலை 1.20 லட்சத்தினையும் தாண்டியது.
ஏன் விற்பனை சரிவு
சுசுகி விலை அதிகரித்தாலும், பைக்கில் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது பின்னடைவாக பார்க்கப்பட்டது. பஜாஜ் அவெஞ்சர் 220 போன்ற பைக்குகளை விட அதிக பணத்தை கோருவதால், அது விற்பனையில் தேக்கத்தினை ஏற்படுத்தியது. இதனால் மெதுவாக விற்பனையானது சரியத் தொடங்கியது.
Not even 1 bike sold: Suzuki Intruder discontinued in india
From December 2021 to May 2022, not a single Intruder 150cc cruiser model bike was sold. Suzuki has announced that it will stop production due to this.