எதிர்வரும் நாட்களில் எரிபொருள் வழங்குவதற்கு புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் எரிபொருள் விநியோக முறைமைக்கு அட்டை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கான விழிப்புணர்வு
எரிபொருள் விநியோகம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
எடுத்துக்காட்டாக, 100 லிட்டர் ரேஷன் அட்டை வைத்திருப்பவர் ஒரு வாரத்திற்கு 60 லீற்றர் எரிபொருளை பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையத்தில் இருந்தும், மீதமுள்ள 40 லீற்றரை வேறு நிலையத்தில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் முறையை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விநியோகம் செய்வதில் இன்று முதல் புதிய நடைமுறை |