திருவாரூர் அருகே, பஞ்சாயத்தில் தன்னை விட இளையவர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க நேர்ந்ததால் மனமுடைந்ததாக கூறப்படும் முதியவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
65 வயதான அஞ்சுகண்ணு என்ற முதியவரின் மகனுக்கும் நாகூர்மீரான் என்பவருக்கும் கோவில் திருவிழாவில் மோதல் ஏற்பட்டது. இதில் நாகூர் மீரான் காயமடைந்த நிலையில், பஞ்சாயத்து கூட்டப்பட்டு அஞ்சுகண்ணுவுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதை செலுத்த முடியாத முதியவர், நாகூர் மீரான் உள்ளிட்டோர் காலில் விழுந்ததாக கூறப்படுகிறது. அன்றிரவே முதியவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், காலில் விழவைத்தவர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நாகூர் மீரான், விக்னேஷ், திவராஜன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.