முப்படைகள், பாதுகாப்புப் படை மற்றும் சிறைத்துறை காவலர்கள் உள்ளிட்டோரை விவசாய பணிகளில் ஈடுபடுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, முப்படைகளை விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் உணவு உற்பத்தியை அதிகரித்து, வெற்றிகரமான பலன்களை அடைய முடியும் என்றார்.
மேலும், இலங்கையில் அரசுக்கு சொந்தமான, பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, விவசாயத்தில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.